உக்ரைன் போர் தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகளுக்கு எதிராக சுவிஸ் பெடரல் புலனாய்வு சேவையின் (FIS) முன்னாள் முகவர் ஜக் பாட் ஐரோப்பிய ஒன்றியத்திடம் மேல்முறையீடு செய்ய உள்ளார்.
சுவிஸ் பெடரல் புலனாய்வு சேவையின் முன்னாள் முகவர் ரஷ்ய சார்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
அவரது வழக்கறிஞர்கள் ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலிடம் நேரடியாக மேல்முறையீடு செய்வார்கள்.
ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்ய விரும்புவதாக ஜக் பாட் தெரிவித்துள்ளார்.
பிரஸ்ஸல்ஸில் வசிக்கும் முன்னாள் புலனாய்வு அதிகாரி, திங்களன்று ஹேக்கில் உள்ள சுவிஸ் தூதுவரிடமிருந்து தனக்கு அழைப்பு வந்ததாகக் கூறியுள்ளார்.
சுவிஸ் இராணுவ பொது அதிகாரியான ஓய்வுபெற்ற கேணல் ஜக் பாட், உளவுத்துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற முன்னாள் மூலோபாய வல்லுநர் ஆவார்.
டிசம்பர் 15 ஆம் திகதி ஜக் பாட் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடைகளை விதித்தது.
மூலம்- swissinfo

