கிரான் கனாரியாவில் உள்ள லாஸ் பால்மாஸ் விமான நிலையத்தில், ஜெனீவாவிலிருந்து வந்த ஒரு விமானம் பெரும் ஆபத்தில் சிக்கிய சம்பவம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒக்டோபர் 28 ஆம் திகதி மாலை 4:30 மணியளவில் Easyjet Switzerland Airbus A320neo விமானம் தரையிறங்கும் போது, நான்கு F-16 போர் விமானங்கள், சமாந்தரமான ஓடுபாதையில் இருந்து புறப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
காண்டோ விமான நிலையத்தில் இரண்டு ஓடுபாதைகளும் சுமார் 200 மீட்டர் இடைவெளியில் இருந்த நிலையில், மூன்று போர் விமானங்கள் அடுத்தடுத்து புறப்பட்டன. இதன்போது, தேவையான பாதுகாப்பு தூரம் மீறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானப் பாதைகள் நேரடியாக வெட்டவில்லை என்றாலும், நான்காவது ஜெட் விமானம் அதன் புறப்படுதலை நிறுத்திக் கொண்டதால் ஆபத்து குறைக்கப்பட்டது.
133 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்களை ஏற்றிச் சென்ற EasyJet விமானம், எந்த அசம்பாவிதமோ அல்லது சேதமோ இல்லாமல் தரையிறங்கியது.
சம்பந்தப்பட்ட F-16 விமானங்கள் “Ocean Sky 2025” என்ற சர்வதேச பயிற்சியில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.
இந்த அனுமதி எவ்வாறு வழங்கப்பட்டது மற்றும் பொதுமக்கள் மற்றும் இராணுவ விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு என்ன பங்கு வகித்தது என்பதை கண்டறிய விசாரரணைகள் இடம்பெறுகின்றன.
மூலம்-bluewin

