சென் காலனின் செவெலனில் உள்ள ரைன் நதிக்கரையில் புதன்கிழமை இறந்து கிடந்த நபர், லிச்சென்ஸ்டீனின் ட்ரைசன் நகராட்சியின் ஊழியர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நகராட்சி கணக்குகளில் ஏற்பட்ட முறைகேடுகள் காரணமாக அவர் சில நாட்களுக்கு முன்னர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். 71,000 சுவிஸ் பிராங்குகள் கணக்கில் இருந்து காணாமல் போனதாக கண்டறியப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
ரைன் நதிக்கரையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட பின்னர், ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏனைய குடும்ப உறுப்பினர்கள் மூவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
சென் காலன் கன்டோனல் பொலிசாருடன் இணைந்து அனைத்து கோணங்களிலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தேசிய பொலிஸ் வியாழக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் 41 வயதான நபர், அவரது 73 வயது தந்தை, 68 வயது தாய் மற்றும் 45 வயது சகோதரி ஆகியோரே உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மூலம்- bluewin

