31.3 C
New York
Tuesday, June 30, 2026

தற்காலிகமாக சீல் வைத்து மூடப்பட்ட யாழ்ப்பாணம் – கொக்குவில் புகையிரத நிலையம்

யாழ்ப்பாணம் – கொக்குவில் புகையிரத நிலையம் தற்காலிகமாக சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.

கொக்குவில் புகையிரத நிலையத்தில் கடமையாற்றிய நிலைய பொறுப்பதிகாரி இருபது லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக தெரிவித்தே கேப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உடனடி நடவடிக்கையாக புகையிரத நிலையம் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளதுடன் நிலைய பொறுப்பதிகாரி தற்காலிக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles