-4.6 C
New York
Sunday, December 28, 2025

டக்ளஸ் மீதும் பாய்ந்தது பயங்கரவாத தடைச்சட்டம்.

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாரவை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவருக்கு கைத்துப்பாக்கியை வழங்கியதாக கூறப்படும் விசாரணை தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்றுமுன்திகம் விசாரணைக்கு அழைக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தா மாலையில் கைது செய்யப்பட்டார்.

2001ஆம் ஆண்டு இராணுவத்தினரால் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஒரு கைத்துப்பாக்கி, பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதுஷின் வசம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான மதுஷ், டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட பின்னர் 2020 ஆம் ஆண்டு கொழும்பில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.

Related Articles

Latest Articles