கிராபுண்டன் கன்டோனில் உள்ள ஃபிளிம்ஸ் நகரின் மையத்தில் உள்ள வியா விட்ஜ் சூராவில் ஏற்பட்ட தீ விபத்தினால் அயலில் உள்ள குடியிருப்பாளர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் 3:40 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
தீ விபத்து ஏற்பட்டபோது வீட்டில் இருந்த ஏழு பேர் காயமின்றி தப்பினர். அயலில் உள்ள 13 குடியிருப்புக்களிலும் இருந்தவர்கள் தற்காலிகமாக ஃபிளிம்ஸில் உள்ள ஒரு ஹோட்டலிலும், புராட்டஸ்டன்ட் திருச்சபையைச் சேர்ந்த ஒரு கட்டிடத்திலும் தங்க வைக்கப்பட்டனர்.
தீவிபத்து ஏற்பட்ட வீடு சேதமடைந்து மக்கள் வசிக்கத் தகுதியற்றதாக உள்ளது.
தீ மற்றும் தொடர்ந்து எரியும் தீப்பொறிகளை அணைக்க ஃபிளிம்ஸ் மற்றும் டிரின் ஆகிய இரண்டு தீயணைப்புப் படையினர் நள்ளிரவு வரை நிறுத்தப்பட்டனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து கிராபுண்டன் மாகாண காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

