டிசம்பர் 25 ஆம் திகதி இரவு 11 மணியளவில், ஆர்காவ், போசென் நகரில் வசிக்கும் ஒருவரின் வீட்டின் முகப்பில் கார் ஒன்று மோதியுள்ளது.
17 வயது ஓட்டுநர் தனியாக அந்தக் காரில் இருந்ததாகவும், அவரிடம் கற்றல் அனுமதி மட்டுமே இருந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
வாகனத்தை சிறிது நேரத்திற்கு முன்னரே திருடியதாக அந்த இளைஞன் தெரிவித்துள்ளார்.
போசனில், அவர் காரின் கட்டுப்பாட்டை இழந்து, நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்கள் மற்றும் வீட்டின் முகப்பின் மீது மோதியுள்ளார்.
இதனால் சிறிய காயங்களுக்குள்ளான அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
வாகனமும் கட்டிடமும் கணிசமான சேதத்தை சந்தித்தன. கற்றல் அனுமதி பறிமுதல் செய்யப்பட்டு உரிமம் வழங்கும் அதிகாரிக்கு அனுப்பப்பட்டது.
மூலம்- 20min.

