23.5 C
New York
Sunday, August 16, 2026

4 கிலோ கிராம் தங்க மூலாம் பூசப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கட்டியுடன் மூவர் கைது

கிளிநொச்சியில் 4 கிலோ கிராம் தங்க மூலாம் பூசப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கட்டியுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

இராணுவப் புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலிற்கு அமைவாக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயமருகில் இரவு 11.00 மணியளவில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

விசேட அதிரடிப்படையினர் குறித்த வாகனத்தை சோதனை மேற்கொண்ட போது காரில் மறைக்கப்பட்ட நிலையில் தங்க மூலாம் பூசப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கட்டியை மீட்டுள்ளனர்.

வவுனியா நோக்கி இதனை கடத்த முற்பட்ட போதே அது மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Latest Articles