சூரிச் நகர பொலிசார் வங்கிக் கிளைக்குள் போலி துப்பாக்கியுடன் நுழைந்த ஒருவரை கைது செய்தனர்.
அவர் யாரையும் அச்சுறுத்தவில்லை. பணமும் திருடப்படவில்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
29 வயதான அந்த நபர் உக்ரேனியர் என்றும், அவரது நோக்கங்களை விசாரித்து வருவதாகவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
யுரேனியா மற்றும் பான்ஹோஃப்ஸ்ட்ராஸ்ஸின் மூலையில் உள்ள UBS வங்கி கிளையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சந்தேகத்திற்கிடமான ஒருவர் இருப்பதாக தகவல் கிடைத்த நிலையில், பொலிசார் வந்து அவரைக் கைது செய்தனர்.
எந்த எதிர்ப்பும் இல்லாமல் அவர் சரணடைந்தார். அந்த நபர் ஒரு கைத்துப்பாக்கியை வைத்திருந்தார். அவர் வைத்திருந்த ஆயுதம் ஒரு போலி ஆயுதம் என்பது தெரியவந்துள்ளது.
மூலம்- 20min.

