25.2 C
New York
Saturday, June 20, 2026

சுவிசிடம் உதவி கோரினார் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி.

போரினால் பாதிக்கப்பட்ட நாட்டு மக்களின் சிரமங்களை சமாளிக்க உதவுமாறு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சுவிட்சர்லாந்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

உலக பொருளாதார மன்றத்தின், பக்க நிகழ்வில் சுவிஸ் ஜனாதிபதி கை பர்மெலினுடனான சந்திப்பின் போது, ​​ஜெலென்ஸ்கி சுவிஸ் உதவிகளின் கோரிக்கைப் பட்டியலை வழங்கினார்.

உக்ரைனின் எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க சுவிஸ் நிறுவனங்கள் ஆதரவளிக்க வேண்டும் என்ற அழைப்பும் இதில் அடங்கும் என்று பர்மெலின் வியாழக்கிழமை மாலை டாவோஸில் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

உக்ரைன் வீடுகளில் வெப்பநிலை தற்போது மைனஸ் இரண்டு முதல் ஒன்பது டிகிரி செல்சியஸ் வரை உள்ளது.

இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும். டாவோஸ் காங்கிரஸ் மையத்திற்குள் நடந்த இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது. ஜெலென்ஸ்கியுடன் ஏராளமான பாதுகாப்புப் படையினரும் இருந்தனர்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles