25.2 C
New York
Saturday, June 20, 2026

தீவிபத்தில் படுகாயமடைந்த இரு சிறுவர்கள் கோமாவில் இருந்து மீண்டனர்.

கிரான்ஸ்-மொன்டானா தீ விபத்தில் பாதிக்கப்பட்ட இரண்டு 16 வயது சிறுவர்கள் கோமா நிலையில் இருந்து மீண்டுள்ளனர்.

இத்தாலியின் மிலனில் உள்ள நிகுவார்டா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர்கள், கோமாவிலிருந்து விழித்தெழுந்து மீண்டும் சுயாதீனமாக சுவாசிக்கத் தொடங்கியுள்ளனர்.

அவர்களால் இன்னும் பேச முடியவில்லை என்றாலும், சிறப்பு கணினி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் தொடர்பு கொண்டுள்ளனர்.

கிரான்ஸ்- மொன்டானா தீவிபத்தில் காயமடைந்தவர்கள் பலர் இன்னமும் கோமா நிலையில் உள்ளனர். சிலர் கோமா நிலையில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மூலம்-bluewin

Related Articles

Latest Articles