19.5 C
New York
Wednesday, September 2, 2026

எங்களின் நடைமுறைகளை இத்தாலி மதிக்க வேண்டும்- சுவிஸ் ஜனாதிபதி பதில்

கிரான்ஸ்- மொன்டானா தீவிபத்து இடம்பெற்ற பார் உரிமையாளர் பிணையில் விடுவிக்கப்பட்டதற்கு இத்தாலி கடும் எதிர்ப்புத் தெரிவிப்பது குறித்து சுவிஸ் ஜனாதிபதி கை பர்மெலின் பதிலளித்துள்ளார்.

“எங்களால் சீற்றத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இத்தாலியில் உள்ளதைப் போன்ற நடைமுறை சுவிட்சர்லாந்தில் உள்ளது.

- Advertisement -

இத்தாலி அதன் சொந்த சட்ட அமைப்பின் கண்ணோட்டத்தில் சுவிட்சர்லாந்தில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கிறது.

எங்களுக்கு அதிகாரப் பிரிப்பு உள்ளது, அது மதிக்கப்பட வேண்டும். இருப்பினும், வாலிஸ் நீதித்துறை முறையாகச் செயல்பட வேண்டும் மற்றும் விசாரணைகளை வெளிப்படையாக நடத்த வேண்டும்.

தவறுகள் நடந்தால், அவை திருத்தப்பட வேண்டும். ஆனால் அரசியல் தலையிடு இருக்க முடியாது. இதுகுறித்து இத்தாலிய பிரதமர் தம்முடன் தொடர்பு கொண்டார் என்றும் சுவிஸ் ஜனாதிபதி கை பர்மெலின் தெரிவித்துள்ளார்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles