19.5 C
New York
Wednesday, September 2, 2026

இத்தாலி தூதுவர் பெர்ன் திரும்ப நிபந்தனை!

சுவிட்சர்லாந்திற்கான இத்தாலிய தூதுவர் கியான் லோரென்சோ கார்னாடோ, இரு நாடுகளின் நீதித்துறை அதிகாரிகளுக்கும் இடையே ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே ரோமுக்கு திரும்புவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரான்ஸ்-மொன்டானா தீ விபத்து விசாரணையில் அதிருப்தி ஏற்பட்ட நிலையில், இத்தாலி அரசாங்கம் சுவிசுக்கான தூதுவரை ரோமுக்குத் திருப்பி அழைத்தது.

- Advertisement -

கிரான்ஸ்-மொன்டானாவில் ஏற்பட்ட கொடிய தீ விபத்து குறித்து “உடனடியாக ஒரு கூட்டு விசாரணைக் குழுவை நிறுவ வேண்டும்” என்று இத்தாலிய பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

திங்களன்று கார்னாடோ இந்த விவகாரம் தொடர்பாக இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி மற்றும் வெளியுறவு அமைச்சர் அன்டோனியோ தஜானியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Related Articles

Latest Articles