16.4 C
New York
Tuesday, March 31, 2026

படத்துக்கு துப்பாக்கியால் சுட்ட பெண் அரசியல்வாதிக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்.

மத சுதந்திரம் மற்றும் மத நம்பிக்கையை மீறியதாக குற்றம்சாட்டப்பட்ட ஒப்பரேஷன் லிபரோவின் இணைத் தலைவரான சனிஜா அமேட்டிக்கு சூரிச் நீதிமன்றத்தினால் இடைநிறுத்தப்பட்ட அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு அவர் குழந்தை இயேசுவை ஏந்திய மாதாவின் படத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, அந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்திருந்தார்.

நேற்று இந்த வழக்கின் விசாரணையின் முடிவில், சூரிச் மாவட்ட நீதிமன்றம் முன்னாள் சூரிச் லிபரல் கிரீன் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருக்கு நாளொன்றுக்கு 50 பிராங் வீதம் 60 நாட்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில், இடைநிறுத்தப்பட்ட தண்டனையை அறிவித்துள்ளது.

சூரிச்சின் நகர சபை உறுப்பினராக லிபரல் கிரீன் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமேட்டி குற்றச்சாட்டுகளை அடுத்து கட்சியை விட்டு வெளியேறியனார்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles