வலாய்ஸ் மாகாணத்தில் உள்ள எவோலீனில் ஏற்பட்ட பனிச்சரிவில், ஸ்வீடிஷ் ஸ்கை சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்தார்.
வெள்ளிக்கிழமை தென்மேற்கு சுவிட்சர்லாந்தின் ரூசெட் பகுதியில் சுமார் 2,850 மீட்டர் உயரத்தில் இறங்கும்போது 47 வயதான ஸ்வீடிஷ் ஸ்கை சுற்றுலா பயணி பனிச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டு புதைக்கப்பட்டார்.
ஐந்து ஸ்கை சுற்றுலா பயணிகள் குழுவில் ஒருவராக அவர் இருந்ததாக வலாய்ஸ் கன்டோனல் பொலிஸ் மற்றும் அரசு வழக்கறிஞர் அலுவலகம் சனிக்கிழமை தெரிவித்தது.
அவரது தோழர்கள் பாதிக்கப்பட்டவரைக் கண்டுபிடித்து பனியில் இருந்து மீட்டனர்.
ஏர்-கிலேசியர்ஸில் இருந்து இரண்டு ஹெலிகொப்டர்களில் சென்ற மீட்புப் படையினர் முதலுதவி செய்த போதும், ஸ்கை சுற்றுலா பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மூலம்- swissinfo

