20.4 C
New York
Thursday, April 24, 2025

 2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 11 கஜ முத்துக்களுடன் நபரொருவர் கைது!

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் வைத்து 2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 11 கஜ முத்துக்களுடன் மயிலவெட்டுவான் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை நேற்று மாலை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

இதன்போது மயிலவெட்டுவான் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கஜ முத்துக்களை வியாபாரம் செய்வதற்காக எடுத்து வந்து காத்துக் கொண்டிருந்த பொது அங்கு மாறுவேடத்தில் இருந்த விசேட அதிரடிப்படையினர் அவரை சுற்றிவளைத்து மடக்கி பிடித்து கைது செய்ததுடன் வியாபாரத்துக்காக எடுத்து வந்த சட்ட விரோதமான 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான 11 கஜமுத்துக்களை மீட்டு தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles