வடக்கு சுவிட்சர்லாந்தின் ஆராவ் அருகே உள்ள சுஹ்ர் நகரில் வசிக்கும் மக்கள், நேற்று மதியம் 1:58 மணியளவில், சைரன் ஒலித்ததால் குழப்பமடைந்தனர். எனினும், Alertswiss இது ஒரு தவறான எச்சரிக்கை. எந்த ஆபத்தும் இல்லை என அறிவித்துள்ளது.
திட்டமிடப்பட்ட வருடாந்த நாடு தழுவிய சைரன் சோதனைக்கு ஒரு நாள் முன்னதாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று ஆர்காவ் மாகாணத்தில் சுமார் 360 நிலையான சைரன்கள் ஒலிக்கும். சுவிட்சர்லாந்து முழுவதும் 5,000 சைரன்கள் உள்ளன.
வருடாந்த சோதனை சைரன்கள் நம்பகத்தன்மையுடன் செயல்படுகின்றனவா என்பதைக் காட்டும் நோக்கம் கொண்டது. அதிகாரிகளின் கூற்றுப்படி, மக்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை.
இந்த ஆண்டு, இருப்பிடத்தைப் பொறுத்து சைரன்கள் மதியம் 1:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை ஒலிக்கும்.
மூலம்- swissinfo

