சோலோதர்ன் மாகாணத்தில் உள்ள கிரென்சென் நோர்ட் ரயில் நிலையம் அருகே, ரயில் வந்து கொண்டிருந்தபோது ஒரு ஓய்வூதியர் அடையாளம் தெரியாத நபரால் தண்டவாளத்தில் தள்ளி விடப்பட்டார். அவர் ரயிலில் மோதி பலத்த காயமடைந்தார்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இந்த சம்பவம் 1வது நடைமேடைக்கு அருகில் நடந்தது. சம்பவ இடத்தில் ஆரம்ப மருத்துவ சிகிச்சை பெற்ற பிறகு, காயமடைந்த நபர் மீட்பு ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
சந்தேகத்திற்குரிய குற்றவாளி முன்னர் ஓய்வூதியரிடம் பணம் கேட்டு, சிறிது நேரத்திற்குப் பிறகு, இந்தச் சம்பவம் நடந்துள்ளது. குற்றவாளி தப்பி ஓடிய நிலையில், பொலிசார் தேடி வருகின்றனர்.
மூலம்- bluewin

