14 C
New York
Friday, May 15, 2026

துப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளை.

சோலோதர்ன் மாகாணத்தின் எர்லின்ஸ்பாக் பிரதான வீதியில் உள்ள ஒரு வங்கிக் கிளையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

சோலோதர்ன் மாகாண பொலிசார், குற்றவாளி குறித்து விசாரணையைத் தொடங்கி சாட்சிகளைத் தேடி வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை மாலை 4:25 மணியளவில் ரைஃபைசன்பாங்க் கிளையில் இந்தக் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

அடையாளம் தெரியாத ஒருவர் வங்கிக்குள் நுழைந்து, ஊழியர்களை துப்பாக்கியால் மிரட்டி, பணத்தைக் கோரியுள்ளார். யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

பல ஆயிரம் சுவிஸ் பிராங் பணத்துடன் குற்றவாளி தப்பி ஓடியுள்ளார். சோலோதர்ன் மற்றும் ஆர்காவ் காவல் படைகளின் பல ரோந்துப் படையினர் உடனடியான பெரியளவில் தேடுதல் வேட்டை நடத்திய போதும், கொள்ளையனை கண்டுபிடிக்கும் முயற்சி தோல்வியடைந்துள்ளது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles