தொற்றுநோயாகக் கருதப்படும், புதிய விலங்கு நோயான லம்பி ஸ்கின் டிசீஸ் (LSD) பிரான்ஸ் வழியாக சுவிட்சர்லாந்தை நெருங்கியுள்ளது.
இந்த தொற்றுநோயின் பொருளாதார பாதிப்பு மிகப்பெரியதாக இருக்கும். என மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் கால்நடை அலுவலகம் (FSVO) எச்சரித்துள்ளது.
பிரச்சனை என்னவென்றால், ஏற்றுமதியாகும் அனைத்து சுவிஸ் சீஸ்களும் பச்சைப் பாலில் இருந்து தயாரிக்கப்படுகின்றன.
சுவிட்சர்லாந்தை ஒரு தொற்றுநோய்ப் பகுதியாக அறிவித்தால், பதப்படுத்தப்படாத பால் பொருட்களின் ஏற்றுமதி கடுமையாக கட்டுப்படுத்தப்படும்.
தற்போதைய விதிமுறைகளின்படி, பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பச்சைப் பால் பொருட்களை ஏற்றுமதி செய்வது சாத்தியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றுநோயைத் தடுக்க, மத்திய அரசு சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை செயல்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
ஒரு விலங்கு LSD நோயால் பாதிக்கப்பட்டால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட பண்ணையில் உள்ள அனைத்து விலங்குகளையும் அதிகாரிகள் கொல்ல வேண்டும்.
இத்தகைய அவசரகால படுகொலைகள் ஏற்கனவே பிரான்சில் விவசாயிகளின் பாரிய போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளன.
மூலம்- 20min

