27.4 C
New York
Friday, September 4, 2026

பாலைதீவு யாத்திரிகர்களுடன் படகு மூழ்கியது- 2 பேர் பலி.

யாழ்ப்பாணம் குருநகர் இறங்குத்துறையில் இருந்து, பாலைதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவுக்கு யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர்.

காணாமல் போன இரண்டு பேரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

- Advertisement -

இன்று காலை 6 மணியளவில் குருநகர் படகுத் துறையில் இருந்து புறப்பட்ட படகே விபத்துக்குள்ளானது. 

குறித்த படகில் 25 பேர் பயணித்த நிலையில் அவர்களில் 23 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானவர்களில் 13 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களில் இரண்டு ஆண்கள் உயிரிழந்தனர் என்றும், மேலும் மூவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 8 பேர் சாதாரண நோயாளர் சிகிச்சை அறையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன இரண்டு பேரை தொடர்ந்தும் தேடும் பணி இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Latest Articles