சனிக்கிழமை முதல் ஈரானிய தலைநகரில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய விமானங்கள் தொடர்ச்சியான குண்டுத் தாக்குதல்களை நடத்தி வருகின்ற போதிலும், தெஹ்ரானில் உள்ள சுவிஸ் தூதரகம் திறந்தே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியுறவு அமைச்சு இன்று இதை உறுதிப்படுத்தியது.
ஆறு சுவிஸ் நாட்டவர்களும் 18 உள்ளூர் ஊழியர்களும் இன்னும் சுவிஸ் தூதரகத்தில் பணிபுரிகின்றனர் என்று வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
சுவிஸ் பாஸ்போர்ட் வைத்திருக்கும் நான்கு ஊழியர்கள் ஏற்கனவே மார்ச் 3 ஆம் திகதி ஈரானை விட்டு வெளியேறி விட்டனர்.
மூலம்- swissinfo

