14.6 C
New York
Sunday, September 27, 2026

கனடாவில் பனிச்சரிவில் சிக்கி 3 சுவிஸ் பிரஜைகள் பலி.

கனடாவில் ஏற்பட்ட பனிச்சரிவில் மூன்று சுவிஸ் நாட்டவர்கள் உயிரிழந்தனர். அந்தக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் ஹெலி-ஸ்கீயிங் பயணத்தில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுவிஸ் வெளியுறவுத்துறை இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளது. “வான்கூவரில் உள்ள சுவிஸ் துணைத் தூதரகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளது,” என்றும், , “உயிரிழந்தவர்களின் உறவினர்களுடனும் தொடர்பில் உள்ளோம்” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

- Advertisement -

ஸ்னோபிரைன்ஸ் என்ற குளிர்கால விளையாட்டுத் தளத்தின்படி, டெரஸ் நகருக்கு அருகிலுள்ள க்னாஸ் மலையில் நான்கு பேர் இருந்தனர்.

அந்தக் குழுவினரே பனிச்சரிவில் சிக்கியுள்ளனர். மூவர் உயிரிழந்த நிலையில் நான்காவது நபர் படுகாயமடைந்து ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles