15.9 C
New York
Wednesday, May 13, 2026

மத்திய கிழக்கிற்கான இணைப்பு விமானங்கள் ஒக்டோபர் 24 வரை இடைநிறுத்தம்.

“மத்திய கிழக்கில் நிலவும் நிலையற்ற சூழல்” காரணமாக, ஸ்விஸ் இன்டர்நேஷனல் ஏர் லைன்ஸ் (SWISS) மற்றும் பிற லுஃப்தான்சா குழும விமான நிறுவனங்கள், சில விதிவிலக்குகளுடன், மே 31 வரை டெல் அவிவ் மற்றும் டுபாய்க்கான அனைத்து விமானங்களையும் ரத்து செய்துள்ளது.

அபுதாபி, அம்மான், பெய்ரூட், ரியாத், எர்பில், தம்மாம், மஸ்கட் மற்றும் தெஹ்ரான் ஆகிய இடங்களுக்கான இணைப்பு விமானங்கள் ஒக்டோபர் 24 வரை இடைநிறுத்தப்படும்.

பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களின் பாதுகாப்பு எப்போதும் லுஃப்தான்சா குழுமத்தின் முதன்மையான முன்னுரிமையாகும் என்று SWISS இணையதளம் கூறுகிறது.

தொடர்ந்து மாறிவரும் சூழல் காரணமாக, தனிப்பட்ட விமான நிறுவனங்களால் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அது குறிப்பிடுகிறது.

இந்த ரத்து நடவடிக்கை லுஃப்தான்சா, SWISS, ஒஸ்ரியன் ஏர்லைன்ஸ், பிரஸ்ஸல்ஸ் ஏர்லைன்ஸ், ITA ஏர்வேஸ் மற்றும் எடெல்வைஸ் ஆகிய நிறுவனங்களைப் பாதிக்கிறது.

யூரோவிங்ஸ் விமான நிறுவனம் ஏப்ரல் 30 வரை டெல் அவிவ், பெய்ரூட் மற்றும் எர்பில் ஆகிய இடங்களுக்கு விமானங்களை இயக்காது.

மூலம்-swissinfo

Related Articles

Latest Articles