25.2 C
New York
Wednesday, August 12, 2026

ரயில் நிலையத்தில் அம்பு மூலம் தாக்குதல் நடத்தியவர் கைது.

பெர்ன் மாகாணத்தில் உள்ள லிஸ் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை காலை, ஒருவர் மீது அம்பு வீசப்பட்டுள்ளது.இதனால் அவருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்று பெர்ன் மாகாண காவல்துறை செவ்வாயன்று தெரிவித்தது.

இந்தச் செயலுக்குப் பின்னணியில் உள்ள சூழ்நிலைகளையும் நோக்கங்களையும் கண்டறிய ஒரு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

அதிகாலை 5 மணிக்குச் சற்று முன்பு இதுகுறித்து அவசர சேவைகளுக்கு அழைப்பு வந்தது, அவர்கள் சம்பவ இடத்திலேயே பாதிக்கப்பட்டவருக்கு உதவினர். அந்த நபர் பரிசோதனைக்காக அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

பல அம்புகளை எய்த சந்தேக நபர் சிறிது நேரத்திலேயே கைது செய்யப்பட்டார். அவர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவருக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் ஒருவரையொருவர் தெரியாது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles