ஒரே இரவில் ஈரானை வீழ்த்திவிட முடியும், அந்த இரவு இன்று இரவாகக் கூட இருக்கலாம். அவர்கள் ஒரு பெரிய விலையைக் கொடுக்கப் போகிறார்கள் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ட்ரம்ப் விதித்த காலக்கெடு இன்று இரவு 8 மணியுடன் நிறைவடையும் நிலையில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அதேவேளை, முதல் விமானி மீட்கப்பட்ட பிறகு, இரண்டாவது விமானி ஈரானில் சிக்கிக்கொண்டார் என்ற தகவலைக் கசியவிட்ட நபரை அடையாளம் காண அமெரிக்க அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.
அந்த அறிக்கை வெளிவருவதற்கு முன்னர் இரண்டாவது விமானியின் நிலை குறித்து ஈரானுக்குத் தெரியாது .இது அமெரிக்காவின் மீட்பு நடவடிக்கையை மிகவும் கடினமாக்கியது.
அந்த அறிக்கையை வெளியிட்ட ஊடக நிறுவனம், தகவலைக் கசியவிட்டவரின் அடையாளத்தை வழங்க வேண்டும் அல்லது சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகள் கோருவார்கள்.
அந்தத் தகவலைக் கசியவிட்டவரைக் கண்டுபிடிக்க நாங்கள் மிகவும் தீவிரமாகத் தேடி வருகிறோம்,”நாங்கள் அதைக் கண்டுபிடித்துவிடுவோம் என்று நினைக்கிறோம்.
ஏனென்றால், அந்தத் தகவலை வெளியிட்ட ஊடக நிறுவனத்திடம் நாங்கள் சென்று, ‘தேசியப் பாதுகாப்பு – தகவலைக் கொடுங்கள் அல்லது சிறைக்குச் செல்லுங்கள்’ என்று கூறுவோம்.” என டிரம்ப் கூறியுள்ளார்.

