28.5 C
New York
Tuesday, April 14, 2026

ஈரானுக்கு முதல் தொகுதி உதவிப் பொருள்களை அனுப்பியது ஐசிஆர்சி.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மனிதாபிமான உதவிகளுக்கான முதல் தொகுதியுடன் ஒரு வாகன அணி தெஹ்ரானை வந்தடைந்துள்ளது.

திங்களன்று, ஜோர்டானிலிருந்து ஈரானிய செஞ்சிலுவைச் சங்கத்திடம் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய முதல் ஐந்து 171தொன் லொறிகள் வழங்கப்பட்டன.

கடந்த ஆறு வாரங்களில் நாட்டிற்கு வந்தடைந்த முதல் சர்வதேசப் பொருட்களில் இவையும் ஒன்றாகும்.

மேலும் ஒன்பது தொகுதிகள் இந்த வாரத்தின் பிற்பகுதியில் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்படும்.

ஏறக்குறைய 25,000 மக்களுக்காகப் போர்வைகள், சமையல் உபகரணத் தொகுப்புகள் மற்றும் சுகாதார உபகரணங்கள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

உதவி மற்றும் நிவாரணப் பணிகளுக்காக மொத்தம் 200 ஜெனரேட்டர்கள் மற்றும் 100 பம்புகளும் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தாக்குதல்களின் விளைவாக ஈரானில் மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் வாரங்களில் மேலும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் உதவித் தொகுதிகளை அனுப்ப ICRC நம்புகிறது.

ஐ.எஃப்.ஆர்.சியின் முதல் வாகன அணி, சுமார் 48 மணி நேரத்திற்கு முன்னர் துருக்கியிலிருந்து புறப்பட்டு, செவ்வாய்க்கிழமை நண்பகலில் தெஹ்ரானை வந்தடைந்தது.

இந்த உதவி “சிறிய அளவுதான்” என்றாலும், “எங்களுக்கு இது மிகவும் முக்கியமானது” என்று அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதில், கடுமையான காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சுமார் 200 மருத்துவக் கருவிகளும், துருக்கிய செஞ்சிலுவைச் சங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட 48 தொன் அத்தியாவசிய உபகரணங்களும் அடங்கும்.

கட்டுப்பாடுகளும் அதிகரித்து வரும் எரிபொருள் விலையும் ஈரானுக்கான மனிதாபிமான விநியோகங்களைப் பாதித்துள்ளன. பொதுவாக, ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்த பொருட்களை விமானம் மூலம் கொண்டு செல்ல “சில மணிநேரங்கள்” மட்டுமே ஆகியிருக்கும்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles