29.6 C
New York
Friday, October 2, 2026

ஜெனீவா கடிகாரக் கண்காட்சி ஆரம்பம்.

ஜெனீவா கடிகாரக் கண்காட்சி நேற்று ஆரம்பமாகியுள்ளது. 65 பிராண்டுகளும், சாதனை எண்ணிக்கையிலான கண்காட்சியாளர்களும் இந்த ஒன்றுகூடலில் பங்கேற்கின்றனர்.

ஜெனீவாவில் நடைபெறும் ‘வாட்சஸ் அண்ட் வொண்டர்ஸ் 2026’ நிகழ்வு செவ்வாய்க்கிழமை தொடங்கியது, இது ஒரு வாரம் நடைபெறும்.

- Advertisement -

முதல் நான்கு நாட்கள் வர்த்தகப் பார்வையாளர்களுக்காக பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ளன. கடைசி மூன்று நாட்களும் பொதுமக்களுக்குத் திறந்திருக்கும்.

ஏற்பாட்டாளர்கள் சுமார் 60,000 பார்வையாளர்கள், 1,700 பத்திரிகையாளர்கள் மற்றும் 6,000-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனையாளர்களை எதிர்பார்க்கின்றனர்.

‘வாட்சஸ் அண்ட் வொண்டர்ஸ் ஜெனீவா அறக்கட்டளை’ (WWGF) செப்டம்பர் 2022-ல் ரோலக்ஸ், ரிச்மாண்ட் மற்றும் படேக் பிலிப் ஆகியவற்றின் முயற்சியால் நிறுவப்பட்டது. இது ஜெனீவாவைத் தளமாகக் கொண்ட ஒரு இலாப நோக்கற்ற அறக்கட்டளை ஆகும்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles