18.1 C
New York
Friday, April 25, 2025

யாழ் போதனா வைத்தியசாலை மகப்பேற்று வைத்திய நிபுணர் இடமாற்றம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய மகப்பேற்று வைத்திய நிபுணர் சிறீதரன் (sritharan) இன்று (03) முதல் இடமாற்றம் பெற்று கொழும்பு டீ சொய்சா பெண்கள் வைத்தியசாலைக்கு செல்வதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேசமயம் மகப்பேற்று வைத்திய நிபுணர் கஜேந்திரன் (kajendran) புதிதாக யாழ் போதனா வைத்தியசாலையில் மகப்பேற்று வைத்திய நிபுணராக கடமைகளை பொறுப்பேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதன்படி, இதுவரை மகப்பேற்று வைத்திய நிபுணர் சிறீதரனின் பொறுப்பில் இருந்த மருத்துவ விடுதியையும் அவருடைய சிகிச்சையக நோயாளர்களையும் மகப்பேற்று வைத்திய நிபுணர் சிறீசரவணபவா (Srisaravanabava) பொறுப்பேற்கவுள்ளார் என வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி (Sathiyamoorthy) தெரிவித்தார்.

18 வருட சேவை

அதேவேளை இதுவரை மகப்பேற்று வைத்திய நிபுணர் சிறீசரவணபவா பொறுப்பில் இருந்த மருத்துவ விடுதியையும் அவருடைய சிகிச்சையக நோயாளர்களையும் மகப்பேற்று வைத்திய நிபுணர் கஜேந்திரன் பொறுப்பேற்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி மகப்பேற்று வைத்திய நிபுணரான சிறீதரன் கடந்த 18 வருடங்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றி தற்போது இடமாற்றம் பெற்றுச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.  

Related Articles

Latest Articles