11.4 C
New York
Monday, April 27, 2026

சுவிஸ் வாழ் இலங்கைத் தமிழருக்கு கராததே கலையின் உயரிய”ஷிஹான்” பட்டம்

உலகில் உயரிய பட்டமான “சிகான் இலங்கையில் முதல் முதலாக ஈழத்து சுவிஸ் வாழ் தமிழ் விபுலானந்தன் கௌரிதாசன் வழங்கப்பட்டுள்ளது . ஜப்பான் கராத்தே இதோசுகாய் அமைப்பின் அதன் சர்வதேச செயலமர்வும் கருப்புப்பட்டி வழங்கும் நிகழ்வும் நேற்று சூரிச்சில் சிறப்பாகஇடம்பெற்றது.

இன் நிகழ்வில் ஜப்பான் கராத்தே இதோசுகாய் அமைப்பின் நான்காவது தலைமுறை தலைமை பயிற்சியாசிரியர் போதே சதாகி சககாமி மற்றும் அவரது துணைவியார் திருமதி சககாமி. சர்வதேச கராத்தே இதோசுரியூ அமைப்பின் பொதுச்செயலாளர் ரென்ஷி அரும்பு ஒடா.ஜப்பான் கராத்தே இதோசுக்காய் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதியும், பிரதம ஆசிரியரும், தெற்காசிய கராத்தே சம்னத்தின் நடுவர் குழாம் தலைவருமான சென்செய் அலெக்சாண்டர்.
ஜப்பான் கராத்தே இதோசுகாய் அமைப்பின் சுவிட்சர்லாந்து நாட்டுக்கான பிரதிநிதியும், தலைமை ஆசிரியரும், சுவிஸ் கராத்தே சம்மேளனத்தின் நடுவர் குழாமின் தேசிய கராத்தே நடுவருமான சிகான் விபுலானந்தன் கௌரிதாசன்,சுவிட்ஸ‌ர்லாந்து செங்காள‌ன் நகர பாராளுமன்றத்தின் முதல்வராக சமூகநலன் செயற்பாட்டாளர் துரைராஜா ஜெயக்குமார், மூத்த மாணவர்கள் ஆகியோஸ் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்

கராத்தே கலையில் உயரிய பட்டமான “சிகான் (Shihan)”. ஜப்பான் இதோசுக்காய் கராத்தே அமைப்பினால் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த உயர்நிலை ஆசிரியர்களுக்கு மட்டுமே இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்த இந்த உரிமம் முதல் தடவையாக ஜப்பான் நாட்டவர் அல்லாத ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கராத்தே “ஷிஹான்” உரிமம் என்பது கராத்தே கலையில் மிகுந்த அனுபவமும் உயர்ந்த நிலையும் பெற்ற ஒருவருக்கு வழங்கப்படும் ஒரு பெருமைக்குரிய சான்றிதழாகும். “ஷிஹான்” என்ற பட்டம் ஒரு முதன்மை பயிற்சியாளரை குறிக்கிறது—அதாவது சிறந்த தொழில்நுட்ப திறன், ஆழமான அறிவு, வலுவான தலைமைத்துவம் மற்றும் இந்தக் கலையில் பல ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் செயல்பட்டவரை குறிக்கும்.

இந்த உரிமம் ஒரு பதவி உயர்வை மட்டும் அல்லாமல், உயர்ந்த தரத்தில் கராத்தே பயிற்சி அளித்தல், வழிகாட்டுதல் மற்றும் அதன் வளர்ச்சிக்கு அவர் செய்த பங்களிப்பையும் அங்கீகரிக்கிறது.

“கராத்தே கலைவில் சிறப்பான அர்ப்பணிப்பு, நிபுணத்துவம் மற்றும் தலைமைத்துவத்தை வெளிப்படுத்திய ஒரு முதன்மை பயிற்சியாளருக்கு வழங்கப்படும் இந்த பெருமைக்குரிய ‘கராத்தே ஷிஹான்’ உரிமத்தை வழங்குவதில் எங்களுக்கு மிகுந்த மரியாதை உள்ளது. இந்த பட்டம், கற்பித்தல், வழிகாட்டுதல் மற்றும் கராத்தேயின் உண்மையான ஆன்மாவை நிலைநிறுத்துவதில் பல ஆண்டுகளாக காட்டிய அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.

இரண்டு நாட்கள் கராத்தே பயிற்சி செயலமர்வு இடம் பெற்றதுடன்
கராத்தே கருப்புப்பட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது அத்துடன் பிரியாவிடை உபசாரமும் மிக சுவைததும்ப இடம்பெற்றது

Related Articles

Latest Articles