குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர தொலைபேசி உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய அவசர உதவி எண் மே மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் 142 என்ற எண்ணை அழைக்கலாம்.
- Advertisement -

இதன் ஊடாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு 24 மணி நேரமும் தொழில்முறை உதவியும் ஆலோசனையும் வழங்கப்படும். இது, கூட்டாட்சி கவுன்சிலர் எலிசபெத் பாம்-ஷ்னைடர் அவர்களால் தொடங்கப்பட்ட குடும்ப, பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான தேசிய தடுப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.
மூலம்- 20min


