25.6 C
New York
Thursday, June 25, 2026

விருந்தோம்பல் துறை ஊழியர்களுக்கு ஊதியம் அதிகரிப்பு.

விருந்தோம்பல் துறைக்கான புதிய மாநில அளவிலான கூட்டுப் பேர ஒப்பந்தம், ஊதிய உயர்வை உள்ளடக்கியதாக, மே மாதம் முதல் அமுலுக்கு வரவுள்ளது.

பொருளாதார விவகாரங்களுக்கான மாநிலச் செயலகத்தின் பணவீக்கக் கணிப்புக்கு ஏற்ப, சமூகப் பங்காளிகள் இந்த ஊதிய மாற்றத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதற்கமைய இந்த துறையில் ஊதியங்கள் சுமார் 0.2 சதவீதம் அதிகரிக்கும்.

தொழிற்பயிற்சி இல்லாத ஊழியர்கள் இனி குறைந்தபட்ச மாதாந்த ஊதியமாக 3,713 சுவிஸ் பிராங்குகளைப் பெறுவார்கள்.

கூட்டாட்சி தொழிற்கல்விச் சான்றிதழ் பெற்ற ஊழியர்கள் குறைந்தபட்சம் 4,070 பிராங்குகளையும், கூட்டாட்சித் தகுதிச் சான்றிதழ் (EFZ) பெற்றவர்கள் 4,528 பிராங்குகளையும் பெறுவார்கள்.

மேலதிகப் பயிற்சி அல்லது தொழில்முறைத் தேர்வு எழுதிய வல்லுநர்கள் முறையே 4,635 மற்றும் 5,293 பிராங்குகளைப் பெறுவார்கள்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles