26.9 C
New York
Sunday, July 5, 2026

சுறா மீன்களின் ரத்தத்தில் கொக்கைன், காபின்

கரீபியன் நாடுகளில் ஒன்றான பஹாமஸ் நாடு இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாக உள்ளது. பல நூற்றுக்கணக்கான தீவுகளை உள்ளடக்கிய இந்த நாட்டை நீர் சூழ்ந்து, இயற்கை வளம் செழித்து காணப்படுகிறது. இந்த நிலையில், கடல் பகுதியில் உள்ள நீர்வாழ் உயிரினங்களை ஆராய்ச்சியாளர்கள் பரிசோதனை செய்தபோது அதிர்ச்சி தகவல் வெளியானது.

அதில், சுறா மீன்களின் ரத்தத்தில் ஆய்வு செய்தபோது கொக்கைன் என்ற போதைப் பொருள், காப்பின், வலி ​​நிவாரணி மற்றும் பிற மருந்து பொருட்கள் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.இதனை உயிரியியலாளர் நடாஸ்கா வோஸ்னிக் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். பஹாமஸ் நாட்டின் எலுவுதீரா தீவுக்கு அருகே 85 சுறா மீன்களின் ரத்த மாதிரிகளை பகுப்பாய்வு செய்ததில், 3-ல் ஒரு பங்கு சுறாக்களில் காபின், அழற்சி எதிர்ப்பு மருந்துகளான அசிட்டோமினோபென் மற்றும் டைகுளோபினாக் ஆகியவையும், மற்றும் கொக்கைன் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதனால் இயற்கை சார்ந்த சூழலியல் நிலையில் இருந்து, கடல் சீர்கெட்டு போயிருப்பதும், அதனை உடனடியாக சரி செய்ய வேண்டிய அவசர தேவையும் ஏற்பட்டு உள்ளது என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது.

Related Articles

Latest Articles