சூரிச் விமான நிலையத்தின் வெள்ளிக்கிழமை மதியம் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, நூற்றுக்கணக்கான சூட்கேஸ்கள் தேங்கிக் கிடந்தன.
பொருட்களைப் பிரிக்கும் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கன்வேயர் பெல்ட்கள் செயலிழந்தன, இதனால் பயணிகளால் செக்-இன் செய்ய முடியவில்லை.
பிற்பகல் சுமார் 3 மணியிலிருந்து கன்வேயர் பெல்ட்கள் மீண்டும் இயங்கத் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நெருக்கடியால் பொருட்களைக் கையாள்வதில் தாமதத்தை ஏற்படுத்தியது, அதன் விளைவாக விமானங்களும் தாமதமாயின. பல்வேறு விமான நிலையப் பங்காளிகளிடமிருந்து கூடுதல் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்ட போதிலும், சில பொருட்கள உரிய நேரத்தில் விமானத்திற்குக் கொண்டு செல்ல முடியவில்லை.
தொழில்நுட்பக் கோளாறு தற்போது சரிசெய்யப்பட்டுவிட்டது. செக்-இன் பணிகள் மீண்டும் சாதாரணமாக இயங்குகின்றன. தேங்கியுள்ள பொருட்கள் கூடிய விரைவில் கையாளப்பட்டு வருகின்றன, என்று ஊடக செய்தித் தொடர்பாளர் கூறினார்.
தங்கள் பயணப் பெட்டிகள் இல்லாமல் சேருமிடத்தை அடையும் பயணிகள், நேரடியாகத் தங்கள் விமான நிறுவனத்தின் தொலைந்த மற்றும் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் பிரிவுக்குச் சென்று, பயணப் பெட்டி அறிக்கைப் படிவத்தைப் பூர்த்தி செய்யுமாறு விமான நிலையம் பரிந்துரைக்கிறது.
மூலம்- 20min


