15.7 C
New York
Monday, September 28, 2026

காட்டுக்குள் விழுந்து நொருங்கிய விமானம்- விமானி பலி.

ஷ்விட்ஸ் மாகாணத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற கோரமான விமான விபத்தில் விமானி உயிரிழந்துள்ளார்.

68 வயதான ஒரு விமானி, வியாழன் பிற்பகல் சுமார் 1:45 மணியளவில், கிளைடரில் தனியாகப் பறப்பதற்காக ஷானிஸ் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார்.

- Advertisement -

ரெய்கன்பர்க் நகராட்சியின் நோச்சென் பகுதியில் உள்ள ஒரு வனப்பகுதியில், அந்த விமானம் விழுந்து நொறுங்கியது.

விமானிக்கு உதவிகள் அனைத்தும் மிகவும் தாமதமாகவே கிடைத்தன. மீட்புக் குழுவினர் விபத்து நடந்த இடத்திற்கு வருவதற்கு முன்பே அவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் உடலை மீட்க, ரெகா வான்வழி மீட்பு சேவையும் ரெய்கன்பர்க் தீயணைப்புத் துறையும் களமிறக்கப்பட்டன.

பின்னர், ஒரு தனியார் ஹெலிகொப்டர் நிறுவனத்தின் உதவியுடன், கடினமான நிலப்பரப்பிலிருந்து கிளைடரின் உடைந்த பாகங்கள் மீட்கப்பட்டன. கிளைடர் விபத்துக்கான காரணம் தற்போது தெரியவில்லை.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles