சுவிஸ் உள்ளிட்ட 60 நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா புதிய வரிகளை அறிவித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க பொருட்களின் இறக்குமதிகள் மீது 12.5 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கப் போவதாக சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது.
அத்துடன், கட்டாய உழைப்பு குறித்த அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை சுவிட்சர்லாந்து திட்டவட்டமாக நிராகரிப்பதாகவும், பொருளாதார விவகாரங்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சி கூட்டாட்சித் துறை (EAER) இன்று அதிகாலையில் தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்துக்கான மொத்த வரி இன்ற காலை 6:01 மணிக்கு 12.5 சதவீதமாக அதிகரிக்கப்படவு ள்ளது. இருப்பினும், சில சுவிஸ் பொருட்களுக்கு விதிவிலக்குகள் பொருந்தும் என்று EAER தெரிவித்துள்ளது.
அதேவேளை அமெரிக்கப் பொருட்கள் மீதான வரி எப்போது விதிக்கப்படும் என அறிவிக்கப்படவில்லை.
மூலம்- bluewin


