24.1 C
New York
Wednesday, September 9, 2026

82 மில்லியன் பிராங் சலுகை பெற்ற சுவிஸ் வங்கியாளர்கள் சங்க முன்னாள் தலைவருக்கு சிறைத்தண்டனை.

பியர் மிராபோவை (Pierre Mirabaud) வெளிநாட்டு அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது மற்றும் பணமோசடியில் ஈடுபட்டது ஆகிய குற்றங்களுக்காக சுவிஸ் கூட்டாட்சி குற்றவியல் நீதிமன்றம் குற்றவாளி என நேற்று தீர்ப்பளித்தது.

சுவிஸ் வங்கியாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரான இவருக்கு, இரண்டு ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது (suspended sentence).

- Advertisement -

ஜெனிவாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கியாளரான இவர் மீதான வழக்கை விரைவு நடைமுறையின் கீழ் விசாரித்த கூட்டாட்சி குற்றவியல் நீதிமன்றம், சுவிட்சர்லாந்தின் தலைமை அரசு வழக்கறிஞர் அலுவலகம் (OAG) தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்த உண்மைகளை உறுதிப்படுத்தியது.

மிராபோவிடம் விசாரணை நடத்திய பிறகு, நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை காலை தனது தீர்ப்பின் முக்கியப் பகுதியை வாசித்தது.

குற்றப்பத்திரிகையின்படி, குவைத் நாட்டைச் சேர்ந்த ஒரு மூத்த அதிகாரி பொது நிதியைத் தனது வங்கியில் முதலீடு செய்வதற்காக, பியர் மிராபோ அவருக்கு மொத்தம் 82 மில்லியன் சுவிஸ் பிராங்க் (100 மில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்பிலான சலுகைகளை வழங்கினார்.

அதற்குப் பதிலாக, அந்த வளைகுடா நாட்டின் பொது சமூகப் பாதுகாப்பு நிறுவனத்தின் (PIFSS) தலைவராக இருந்த அந்த குவைத் அதிகாரி, அந்தநிறுவனத்தின் நிதியில் ஒரு பகுதியை – அதாவது 500 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் (405 மில்லியன் சுவிஸ் பிராங்க்) அதிகமான தொகையை – ஜெனிவாவைச் சேர்ந்த அந்தத் தனியார் வங்கியில் முதலீடு செய்தார்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles