20.8 C
New York
Monday, June 1, 2026

26 பெரிய ஏரிகளின் வெப்பநிலை அதிகரிப்பு.

நாட்டின் 32 பெரிய ஏரிகளில் சுமார் 26 ஏரிகளில், இந்த ஆண்டில் இதற்கு முன் பதிவு செய்யப்படாத மேற்பரப்பு வெப்பநிலை காணப்படுகிறது.

சூரிச், ஜெனீவா, மாகியோர், லூசெர்ன் மற்றும் பிரியன்ஸ் ஆகிய ஏரிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.

சனிக்கிழமையன்று, பல ஏரிகளின் வெப்பநிலை 20 டிகிரி அளவைத் தாண்டியது, சில இடங்களில் வெப்பநிலை கிட்டத்தட்ட 25°C-ஐ எட்டியது.

முர்டன் ஏரி 24.6°C வெப்பநிலையுடன் மிகவும் வெப்பமாக இருந்தது. அதற்கு அடுத்தபடியாக ஜெனீவா ஏரி 23.6°C வெப்பநிலையையும், சூரிச் ஏரி 22.4°C வெப்பநிலையையும் பதிவு செய்தன.

தெற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள மாகியோர் ஏரி 21.8°C வெப்பநிலையைப் பதிவு செய்தது. லூசெர்ன் ஏரி மற்றும் பீல் ஏரி (இரண்டும் 20.3°C) ஆகியவை சற்று குளிர்ச்சியாக இருந்தாலும், பருவகால சராசரியை விட கணிசமாக அதிகமாக இருந்தன.

வெப்ப அலைக்காலம் விரிவடைந்து வருவதாகவும், இது அதிகரித்து வரும் காலநிலை அபாயங்களை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவும் சுவிஸ் காலநிலை நிபுணர் சோனியா செனவிரத்ன எச்சரிக்கிறார்.

அதிக நீர் வெப்பநிலை குளிப்பவர்களுக்கு விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்: நீலப் பாசிகள், பக்டீரியாக்கள் மற்றும் வாத்துப் பூச்சிகள் (செர்கேரியா) ஆகியவை வெதுவெதுப்பான நீரில் அதிகமாகக் காணப்படுகின்றன.

“எதிர்காலத்தில், கோடையின் பிற்பகுதியில் செர்கேரியா பல ஏரிகளுக்குப் பரவ அதிக வாய்ப்புள்ளது,” என்று சுவிஸ் கூட்டாட்சி நீர்வாழ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (Eawag) ஆராய்ச்சியாளரான மார்ட்டின் ஷ்மிட், கூறினார்.

இந்த நுண்ணிய லார்வாக்கள் மனிதர்களுக்கு ஒவ்வாமை எதிர்வினையையும் கடுமையான அரிப்பையும் ஏற்படுத்தக்கூடும்.

மீன் உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. “நீர் சூடாவது ஏரியில் உள்ள உயிரினங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது,” என்று நியூசாடெல் பல்கலைக்கழகத்தின் காலநிலை ஆய்வாளர் மார்ட்டின் ரெபெடெஸ் கூறினார்.

டிரவுட் மற்றும் சார் மீன்களை உள்ளடக்கிய சால்மனிட் வகை மீன்கள் பாதிக்கப்படுகின்றன: அவற்றுக்குக் குளிர்ந்த, ஆக்ஸிஜன் நிறைந்த நீர் தேவைப்படுகிறது, மேலும் வெப்பநிலை நீண்ட காலத்திற்கு 20°C-ஐத் தாண்டினால் அவை இறந்துவிடும்.

“சுமார் 15°C-க்கு மேல் வெப்பநிலை சென்றாலே அவற்றின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுவிடுகிறது,” என்று ரெபெடெஸ் டேஜஸ்-கூறினார்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles