எபோலா நோயால் பாதிக்கப்பட்டிருந்த சுவிஸ் பெண் ஜெனீவா பல்கலைக்கழக மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டு வீடு செல்வ அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனை இதை உறுதிப்படுத்தியுள்ளது.
16 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு, அந்தப் பெண் புதன்கிழமை அன்று மருத்துவமனையிலிருந்து வெளியேறினார்.

தற்போது சுவிட்சர்லாந்தில் எபோலா நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் யாரும் இல்லை.
அந்த சுவிஸ் பெண்ணுக்கு ஒக்டோபர் 20 அன்று நைஜீரியாவில் வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஒக்டோபர் 26 அன்று அவர் ரெகா ஏர் அம்புலன்ஸ் மூலம் சுவிட்சர்லாந்திற்கு அழைத்து வரப்பட்டார்.
நோயாளியுடன் அவரது கணவரும் சுவிட்சர்லாந்திற்கு அழைத்து வரப்பட்டார். நைஜீரியாவில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் ஊழியரான அவர், நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என்ற அடிப்படையில் சூரிச் பல்கலைக்கழக மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டார்.
ஆனால், நவம்பர் 4 அன்றே அவரால் மருத்துவமனையிலிருந்து வெளியேற முடிந்தது. அவருக்கு எபோலா தொற்று ஏற்படவில்லை.
மூலம்- swissinfo


