23.9 C
New York
Sunday, July 12, 2026

பள்ளிகள் மீண்டும் தொடங்கும் போது கைபேசித் தடை தொடரும்.

நிட்வால்டன் மாகாணத்தில் கோடை விடுமுறைக்குப் பின்னர் தொடக்கப் பள்ளிகள் மீண்டும் தொடங்கும் போது, ​​கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விதிகள் தொடர்ந்து அமுலில் இருக்கும். கைபேசிகள் கல்வி நோக்கங்களுக்கும் அவசரத் தேவைகளுக்கும் மட்டுமே அனுமதிக்கப்படும்.

ஓகஸ்ட் 1, 2025 முதல், இந்த மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளி வளாகங்களில் பாடவேளைகள் அல்லது இடைவேளை நேரங்களில் கைபேசிகள், மடிக்கணினிகள், டப்லெட்டுகள் மற்றும் பிற மின்னணு சாதனங்களுக்கு தடைவிதிக்கப்பட்டது.

பாடங்களுக்கோ அல்லது அவசரத் தேவைகளுக்கோ சாதனங்கள் தேவைப்பட்டால் விதிவிலக்குகள் பொருந்தும்.

புதிய வழிகாட்டுதல்கள் “ஒரு சீரான, மாகாண அளவிலான கட்டமைப்பை உருவாக்கியுள்ளன” என்று, இந்த மாகாணத்தின் பள்ளிகள் மற்றும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பேட்ரிக் மேயர், தெரிவித்தார்.

இந்த மாகாணத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் ஏற்கனவே இதேபோன்ற விதிகள் அமுலில் இருந்ததால், இந்த நடவடிக்கை “ஒரு அடிப்படை மாற்றமாக” அமையவில்லை என்றும், “ஒட்டுமொத்த வரவேற்பு நேர்மறையாகவே உள்ளது” என்றும் அவர் கூறினார்.

இந்த மாகாணம் வேண்டுமென்றே “கைபேசித் தடை” என்று குறிப்பிடுவதைத் தவிர்க்கிறது. அது ஒரு மிக எளிமையான விளக்கமாக இருக்கும் என்று மேயர் கூறினார்.

பாடவேளைகளிலும் பள்ளியிலும் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்குவதே இதன் நோக்கம். அதே நேரத்தில், ஊடக எழுத்தறிவை ஊக்குவிப்பது பாடத்திட்டத்தில் தொடர்கிறது.

“கல்விக்கு உகந்த இடங்களில் மாணவர்கள் டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும்,” என்று மேயர் மேலும் கூறினார்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles