உலகக்கோப்பை கால்பந்த 2026 காலிறுதிப் போட்டியில், சுவிட்சர்லாந்து அணியை கூடுதல் நேர ஆட்டத்தில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
கூடுதல் நேரத்தில் ஜூலியன் அல்வரெஸ் மற்றும் லௌடாரோ மார்டினெஸ் ஆகியோர் கோல்களைப் அடித்து அர்ஜென்டினாவின் வெற்றியை உறுதி செய்தனர்.
சுவிட்சர்லாந்து அணி போட்டியைத் துடிப்புடன் தொடங்கினாலும், அர்ஜென்டினா வீரர் அலெக்சிஸ் மெக் அலிஸ்டர் மெஸ்ஸியின் கோர்னர் வாய்ப்பை லாவகமாகத் தலையால் முட்டி கோலாக மாற்றினார்.
அர்ஜென்டினா கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ், சுவிட்சர்லாந்து வீரர் பிரீல் எம்போலோவின் ஆபத்தான முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தி அணியின் முன்னிலையைக் காத்தார்.
இரண்டாம் பாதியில் டொன் என்டோயே கோல் அடித்து சுவிட்சர்லாந்தை சமநிலைக்குக் கொண்டு வந்தார்.
போட்டியின் 72-வது நிமிடத்தில், எம்போலோ இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்று மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட, அர்ஜென்டினா கூடுதல் பலம் பெற்றது.
மெஸ்ஸியின் முயற்சிகள் மயிரிழையில் தவறிய போதிலும், கூடுதல் நேரத்தில் ஜூலியன் அல்வரெஸ் ஒரு அற்புதமான கோலை அடிக்க, தொடர்ந்து லௌடாரோ மார்டினெஸ் மற்றுமொரு கோலை அடித்து வெற்றியை உறுதி செய்தார்.
இந்த வெற்றியின் மூலம், வரும் புதன்கிழமை அட்லாண்டா மைதானத்தில் நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியை அர்ஜென்டினா எதிர்கொள்ளவுள்ளது.
சுவிட்சர்லாந்து அணி உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.


