27.2 C
New York
Sunday, July 19, 2026

ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் 2 அமெரிக்க படையினர் பலி.

ஜோர்தான் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு அமெரிக்க படையினர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் காணாமல் போயுள்ளார்.

ஈரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாகவே இந்த இரு சிப்பாய்களும் உயிரிழந்துள்ளனர் என்று அமெரிக்க மத்திய கட்டளையகம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், இத்தாக்குதல்களில் அமெரிக்க இராணுவத்தினர் நால்வர் காயமடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து ஈரான் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles