ஸ்பெய்ன் தலைநகர் மட்ரிட் அருகே சுமார் 13,000 ஹெக்டேர் பரப்பளவில் காட்டுத் தீ பரவியுள்ளது. இது 18,000-க்கும் மேற்பட்ட கால்பந்து மைதானங்களுக்குச் சமமாகும்.
இன்று அதிகாலை 14 கிலோமீட்டர் தூரம் வரை பரவிய தீ இன்னும் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை என அரசு ஒளிபரப்பு நிறுவனமான RTVE தெரிவித்துள்ளது.
தீ பரவுவதைத் தடுக்கும் பாதைகளை உருவாக்கவும், தீயைக் கட்டுப்படுத்தவும் 500-க்கும் மேற்பட்ட அவசரகாலப் பணியாளர்கள் களத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இதுவரை, மக்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து தீயை விலக்கி வைப்பதில் அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்று பிராந்திய சுற்றுச்சூழல் அமைச்சர் மெர்சிடிஸ் கோமஸ் கூறினார். இவர்களுக்கு, இராணுவ அவசரகாலப் பிரிவு (UME) உள்ளிட்ட அமைப்புகள் ஆதரவளித்து வருகின்றன.
களப்பணியாளர்களுக்கு 25 தீயணைப்பு விமானங்கள் ஆதரவளித்து வந்தன. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சுமார் 800 மக்கள் வசிக்கும் 20 குடியிருப்புகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக கோமஸ் தெரிவித்தார்.


