17.2 C
New York
Wednesday, September 10, 2025

ஐஸ் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் வவுனியா பொலிசாரால் கைது

ஐஸ் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்ட மூவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிசார் இன்று (10) தெரிவித்தனர்.

வவுனியா பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் எச்எம்.ரிஸ்வி தலைமையிலான பொலிஸ்  இரகசிய தகவலையடுத்து அவர்கள் கடந்த 28 ஆம் திகதி செட்டிகுளத்தில் வசிக்கும் 35 வயது இளைஞர் ஒருவரை 17 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் வைத்து கைது செய்தனர்.

நீதிமன்ற அனுமதி பெற்று குறித்த இளைஞர் பொலிசாரால் தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் உக்குளாங்குளம், மில் வீதி பகுதியில் வைத்து செட்டிகுளத்தில் வசிக்கும் 36 வயதுடைய இளைஞரும் 12 இலட்சம் பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டார்

Related Articles

Latest Articles