வெப்ப அலையிலிருந்து மக்களைப் பாதுகாக்கத் தவறியதற்காக, சுற்றுச்சூழல் அமைச்சர் அல்பர்ட் ரோஸ்டியை, அவரது பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என பசுமைக் கட்சித் தலைவர் லிசா மசோன் அழைப்பு விடுத்துள்ளார்.
ரோஸ்டியின் தலைமையின் கீழ், காலநிலை கொள்கையில் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன என்று பசுமைக் கட்சித் தலைவர் டமீடியா குழுமத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார்.
“இந்தத் துறையில் அல்பர்ட் ரோஸ்டியை விட வேறு எந்த அரசாங்க அமைச்சரும் சிறப்பாகச் செயல்படுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.”
இன்னும் ஜூலை மாதம் கூட வரவில்லை, அதற்குள் நாம் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டவர்களை எண்ணத் தொடங்கிவிட்டோம்.
கடுமையான வறட்சி, விவசாயிகளின் உதவிக்கான கோரிக்கைகள் மற்றும் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்த ஆறுகளில் மீன்கள் இறப்பது என நாம் ஒரு நெருக்கடியின் மத்தியில் இருக்கிறோம், ஆனால் சுவிஸ் அரசாங்கம் விடுமுறையில் இருக்கிறது.
சுவிட்சர்லாந்தின் காலநிலை கொள்கையை ரோஸ்டி பாழாக்கி விட்டார். பசுமையாக்கல் முயற்சிகள், கட்டிடங்களைப் புதுப்பித்தல் அல்லது பணியிடங்களில் உண்மையான பாதுகாப்பு போன்ற நடவடிக்கைகளுக்கான திட்டத்தை அரசாங்கம் வகுக்க வேண்டும்.
மூலம்- swissinfo


