15.5 C
New York
Sunday, September 27, 2026

பெர்லினில் கூட்டத்தின் மீது மோதிய கார்- ஒருவர் பலி, 16 பேர் காயம்.

ஜெர்மனியின் பெர்லின் நகரில், பிரைட் நிகழ்வுக் கூட்டத்தின் மீது கார் ஒன்று வேகமாக   மோதியதில்,   ஒருவர்  உயிரிழந்ததாகவும்,  குறைந்தது 16 பேர் காயமடைந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் அல்லது அதற்கு மேற்பட்ட சந்தேக நபர்களைத் தீவிரமாகத் தேடி வருவதாகவும்,காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

பிரைட் நிகழ்வின்போது, பொது மக்கள் மீது  மோதியதாகக் கூறப்படும் கார், பூங்காவிற்கு அருகே கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த வாகனம் ஒரு மரத்தில் மோதிய பின்னர் ஓட்டுநர் வெளியேறி ஓடியிருக்கலாம் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் சிலருக்கு உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும்  அவர்கள் கூறியுள்ளனர்.

Related Articles

Latest Articles