வாட் மாகாணத்தில் உள்ள வுஃப்லென்ஸ்-லா-வில்லே தொழில்துறைப் பகுதியில் உள்ள ஒரு களஞ்சியத்தில் நேற்றிரவு பாரியதீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சுமார் 50 தீயணைப்பு வீரர்களும், ஒரு டசின் வாகனங்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்பது குறித்து உடனடித் தகவல் எதுவும் இல்லை.
நேற்று இரவு சுமார் 8:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக, 118 அவசர சேவைகளின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இரவு வெகுநேரம் கடந்த பின்னரும், தீயணைப்புப் பணிகள் நிறைவடையவில்லை.
ரயில் பாதைக்கு அருகில் இருப்பதால், புசிக்னி மற்றும் கொசோனே-பெந்தலாஸ் இடையேயான ரயில் சேவை நிறுத்தப்பட்டது. சுவிஸ் கூட்டாட்சி ரயில்வே (SBB) மாற்றுப் பேருந்துகளை வழங்க முயற்சிகளை மேற்கொண்டது.
மூலம்- bluewin


