18.8 C
New York
Tuesday, September 9, 2025

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் இடம்பெறவிருந்த பாரிய மரக்கடத்தல் முயற்சி பொலிஸாரினால் முறியடிப்பு

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில்  இடம்பெறவிருந்த பாரிய மரக்கடத்தல் முயற்சி பொலிஸாரினால் முறியடிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி கனகம்புளியடி சந்திக்கு அருகாமையில் இன்று காலை சந்தேகத்திற்கு இடமான முறையில் வீதியில் பயணித்த டிப்பர் வாகனமொன்றை சோதனையிட்ட போது சுமார் 30 இலட்ச ரூபா பெறுமதியான மரக்குற்றிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் மரக்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் வாகனமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மரக்கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் வீதியில் கடமையில் இருந்த பொலிஸாரிடம் சுமார் ஒரு இலட்ச ரூபா கையூட்டல் வழங்க தயார் என தெரிவித்திருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Latest Articles