22.5 C
New York
Tuesday, September 9, 2025

யாழில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளரின் மனைவி ஓட்டிச் சென்ற கார்l மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து

யாழில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளரின் மனைவி ஓட்டிச் சென்ற சென்ற கார் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்தானது இன்று இரவு யாழ். இலுப்பையடிச் சந்தியில் இடம்பெற்றுள்ளது.

யாழ். நாவலர் வீதியால் வருகை தந்த கார் இழுப்பையடிச் சந்தியை கடக்க முற்பட்ட நிலையில், யாழ். பலாலி வீதியூடாக புன்னாலைக் கட்டுவன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் போது விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனின் கால்கள் முறிவடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலை(Teaching Hospital Jaffna)அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles