-4.8 C
New York
Sunday, December 28, 2025

யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு கைதிகளை ஏற்றி சென்ற, சிறைச்சாலைப் பேருந்து, விபத்து

யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு கைதிகளை ஏற்றி சென்ற, சிறைச்சாலைப் பேருந்து, விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

ஊர்காவற்துறை நீதிமன்றில் நேற்றையதினம் வழக்கு விசாரணைகள் முடிவடைந்த பின்னர் கைதிகளை யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு ஏற்றி சென்ற போது, நாரந்தனை பகுதியில் முன்னால் சென்று கொண்டிருந்த ஹயஸ் ரக வாகனம் திடீரென நிறுத்தப்பட்டமையால், பின்னால் சென்ற சிறைச்சாலைக்கு சொந்தமான பேருந்து மோதி விபத்துக்கு உள்ளானது.

விபத்தில் ஹயஸ் ரக வாகனத்தில் பயணித்த நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles